மேற்குவங்கத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலம் பரத்வான் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப்பிரிவில் இன்று காலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது அங்கு 4 நோயாளிகள் இருந்தனர். இதில் சந்தியா ராணி என்ற பெண் நோயாளி தீயில் சிக்கி உயிரிழந்தார். மற்ற மூவரும் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.